இலங்கையில் இறுதிக்கட்டப்போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப் பெற்ற ஐ.நா. விசாரணைக் குழு பாதிக்கப்பட் அனைத்து தமிழர்களிடமிருந்தும் சாட்சியங்களாகவும், ஆதாரங்களாகவும் மேலதிக விவரங்ளை பெறவிரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
நீங்கள் நேரிடையாக பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது உறவினர்கள்பாதிக்கப்பட்டிருந்தாலோ, 10 பக்கங்களுக்கு மிகைப்படாமல் உங்கள்சாட்சியங்களையும் ஆதாரங்களையும் அனுப்பிவைக்கலாம்.
ஆங்கிலத்தில் எழுதுவது கடினமாக இருப்பவருக்கு , தமிழ் அமைப்பைச்சார்ந்தவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அவர்களிடமிருந்து விவரங்களைச்சேகரித்து அவர்களே அனுப்பலாம். இதை கடமையாய் கருதி செய்யவேண்டும்
உலகம் திரும்பிப் பார்க்க இலங்கை தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் இறுதிவாய்ப்பாகும். அனுப்பிவைக்கவேண்டியது தமிழர்களின் வரலாற்று கடமையாகும்
விசாரனை குழுவிற்கு தமிழர்கள் தங்களது சாட்சியங்களை அனுப்பிவைக்க தவறினால் சிங்களவர்கள் அனுப்பும் பொய்யான ஆதாரங்களே அவரகளுக்கு கிடைக்கபெற்று அதன் படி தீர்ப்புகள் அமைந்து விடும் என்பதை மறவாதீர்.
ஓருவர் ஓரு தடவைதான் அனுப்பமுடியும். எத்தனை மின்னஞ்ல்கள் வருகின்றன என்பது கவனிக்கப்படுகிறது புகார்கள முதலில் அனுப்புங்கள் ஆதாரங்கள் தற்போது அனுப்பவேண்டியதில்லை. அனுப்பப்படும் தகவல்கள் பாதுகாக்கப்படும்.
தமிழகத்தை சேர்ந்தவராய் இருந்தால், நம்மால் முடிந்தது, பாதிக்கபட்ட பல ஈழத்தமிழர் குடும்பங்கள் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தஞ்சம் புகுந்து இருக்கின்றனர்.... அவர்களை அணுகி இத்தைகைய புகர்களை அனுப்பும்படிபடி வேண்டிக் அவர்கள் அந்த புகார்களை அனுப்புவதற்கு தேவையான உதவி செய்யலாம்
புகார்கள் அனுப்ப இறுதி நாள் 15-12-2010
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி panelofexpertsregistry@un.org
விரும்பினால் அதே நேரத்தில் பீ.பீ.சீ. இல் unsubmission@cwvhr.org க்கு அனுப்பினால் ஓரு பிரதி இவர்களிடம் சேமிக்கப்படும்.
உலகத் தமிழ் பேரமைப்பு, சார்பாக தென் செய்தி என்ற செய்திமடலில் வந்தவையே மேற்குறிப்பிடபட்டவையாகும்
Theynagam
Friday, December 3, 2010
Thursday, March 4, 2010
தேனகம்
2008 தை மாதம் ஆரம்பித்த என் முதல் பதிவு மீண்டும் நீண்ட இடை வெளிக்குப்பின் இப்போது 2010ல் மீள்கிறேன். இளவேனில் துவங்கிவிட்டது பூக்கள் பூக்கும்
' ஆயிரத்தில் ஒருவன் ' சினிமா விமர்சனம்
ஒரு வீரனின் வரலாற்றை தேடுகிறது கதை . துல்லியமான ஒலிப்பதிவு , ஒளிப்பதிவு, நவீன தொழில் நுட்ட காட்சிகள், எல்லாம் சேர்ந்து படத்துக்கு பெரிய பிரமாண்டத்தைக் கொடுக்கிறது. 'அதோ அந்த பறவை ' பாடல் புதிய பாத்திரத்தில் பழைய தேன். கார்திக், ரீமாசென், அன்டரீயா, மூவரில் நடிப்பிலும் கவர்ச்சியிலும் டரீமாசென் முந்துகிறார் சோழர், பாண்டியர் என்றவுடன் நம் முன்னோர்களின் சுவடல்லவா என் மனம் ஒன்றி லயிக்கின்றோம் அதிர்ச்சி காத்திருக்கிறது தெரியாமல் , எத்தனை மனிதர்களின் பங்களிப்பு, எத்தனை மனித சக்திகள் திரைக்குப்பின்னால், பல கோடிகள் முதலீடு இத்தனையும் கொண்டு எதை சொல்ல வந்தார்கள் . அழுக்கேறி கருபான ஆடையனிந்த கருப்பு நிற மனித கூட்டம், இவர்கள் வறுமையின் பேரில் நாகரீகமற்று நரமாமிசமுண்டு கேவலமாக வாழ்கிறார்கள் இவர்களை யார் என்று அடையாளப்படுத்துகிறார்கள் தமிழர்களை எந்த தமிழர்களை இரண்டாயிரம் வருசத்துக்கு முன் சிலப்பதிகாரம், திருக்குறளை தந்த தமிழர்களைப்பார்த்து. கதையில் சோழர், பாண்டியர் என்ற பெயரை இழுக்காவிட்டால் எதோ கதை என்று பார்த்திருக்கலாம் மனசு நெருடுகிறது காசு கொடுத்து படம் பார்க்க போன தமிழருக்கெல்லாம் பூசிவிட்டார்கள் கரியை இயக்குனர் தடுமாறியிருக்கிறார்

Tuesday, January 15, 2008
பொங்குக!!
தைத்திங்கள் 15, 2008, தமிழர்கள் இல்லங்கள் தோறும் பொங்கி வழியும் திருநாள். பொங்குதல் என்பது மேலோங்கி வருவதை குறிக்கிறது. ஆற்றல் பொதிந்த வார்த்தை, அரிசியும், நீரும், பருப்பும், சக்கரையும் தித்திப்பான பொங்களாய் மாற முதல் படியாய் பொங்கி பொங்கி வரும் அழகிய காட்சி ' பொங்களோ பொங்கள் ' என்று வாயார கூவி எல்லோரும் வாழ்த்த, அதே பொங்களான மகிழ்ச்சி மனதிலும் நிறைகின்றது. ஆற்றல் உறைகின்றது. அதே உவகை அனைவருக்கும் என்றென்றும் அமைய வாழ்த்தி வணங்கி என் முதல் வலைப்பதிவை அமைந்துக்கொள்ள விரும்புகிறேன்
கடலில் கலக்க ஓடி வரும் என்னற்ற நீரோட்டங்கள் போல மனதில் உருவாகும் எத்தனையோ விசயங்களை எழுத்துகளாய் கொட்டி விட நினைத்தாலும்., அதை படிக்கும் யாவருக்கும் அது பயன்னளிக்கிறதோ இல்லையோ, குறைந்த பட்சம் ரசனைக்குள்ளானது என்ற உத்தரவாதத்தை
கொடுக்க முயற்ச்சிகின்றேன்.
பல தலைப்புகளில் பல விசயங்களைத் தாங்கி வரும் சஞ்சிகை போல், அமைக்கலாம் என்ற நிலையில் இருக்கிறேன். பிழைகள் தவிர்க்கவும்
சீர்பட அமைக்கவும் யாரும் உதவ முன்வரலாம். தங்கள மேலான கருத்துகள்
மதிக்கப்படும்.
நன்றி!
அன்புடன்,
தொடர்வேன்

Wednesday, January 2, 2008
Wednesday, December 19, 2007
Subscribe to:
Comments (Atom)