Tuesday, January 15, 2008

பொங்குக!!

தைத்திங்கள் 15, 2008, தமிழர்கள் இல்லங்கள் தோறும் பொங்கி வழியும் திருநாள். பொங்குதல் என்பது மேலோங்கி வருவதை குறிக்கிறது. ஆற்றல் பொதிந்த வார்த்தை, அரிசியும், நீரும், பருப்பும், சக்கரையும் தித்திப்பான பொங்களாய் மாற முதல் படியாய் பொங்கி பொங்கி வரும் அழகிய காட்சி ' பொங்களோ பொங்கள் ' என்று வாயார கூவி எல்லோரும் வாழ்த்த, அதே பொங்களான மகிழ்ச்சி மனதிலும் நிறைகின்றது. ஆற்றல் உறைகின்றது. அதே உவகை அனைவருக்கும் என்றென்றும் அமைய வாழ்த்தி வணங்கி என் முதல் வலைப்பதிவை அமைந்துக்கொள்ள விரும்புகிறேன்

கடலில் கலக்க ஓடி வரும் என்னற்ற நீரோட்டங்கள் போல மனதில் உருவாகும் எத்தனையோ விசயங்களை எழுத்துகளாய் கொட்டி விட நினைத்தாலும்., அதை படிக்கும் யாவருக்கும் அது பயன்னளிக்கிறதோ இல்லையோ, குறைந்த பட்சம் ரசனைக்குள்ளானது என்ற உத்தரவாதத்தை

கொடுக்க முயற்ச்சிகின்றேன்.

பல தலைப்புகளில் பல விசயங்களைத் தாங்கி வரும் சஞ்சிகை போல், அமைக்கலாம் என்ற நிலையில் இருக்கிறேன். பிழைகள் தவிர்க்கவும்
சீர்பட அமைக்கவும் யாரும் உதவ முன்வரலாம். தங்கள மேலான கருத்துகள்
மதிக்கப்படும்.

நன்றி!


அன்புடன்,
தொடர்வேன்

No comments: