Friday, December 3, 2010

ஐ.நா.விச்சரானனை குழு தமிழர் வரலாற்றுக் கடமை

இலங்கையில் இறுதிக்கட்டப்போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப் பெற்ற ஐ.நா. விசாரணைக் குழு பாதிக்கப்பட் அனைத்து தமிழர்களிடமிருந்தும் சாட்சியங்களாகவும், ஆதாரங்களாகவும் மேலதிக விவரங்ளை பெறவிரும்புவதாகத் தெரிவித்துள்ளது.

நீங்கள் நேரிடையாக பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது உறவினர்கள்பாதிக்கப்பட்டிருந்தாலோ, 10 பக்கங்களுக்கு மிகைப்படாமல் உங்கள்சாட்சியங்களையும் ஆதாரங்களையும் அனுப்பிவைக்கலாம்.


ஆங்கிலத்தில் எழுதுவது கடினமாக இருப்பவருக்கு , தமிழ் அமைப்பைச்சார்ந்தவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அவர்களிடமிருந்து விவரங்களைச்சேகரித்து அவர்களே அனுப்பலாம். இதை கடமையாய் கருதி செய்யவேண்டும்

உலகம் திரும்பிப் பார்க்க இலங்கை தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் இறுதிவாய்ப்பாகும். அனுப்பிவைக்கவேண்டியது தமிழர்களின் வரலாற்று கடமையாகும்

விசாரனை குழுவிற்கு தமிழர்கள் தங்களது சாட்சியங்களை அனுப்பிவைக்க தவறினால் சிங்களவர்கள் அனுப்பும் பொய்யான ஆதாரங்களே அவரகளுக்கு கிடைக்கபெற்று அதன் படி தீர்ப்புகள் அமைந்து விடும் என்பதை மறவாதீர்.


ஓருவர் ஓரு தடவைதான் அனுப்பமுடியும். எத்தனை மின்னஞ்ல்கள் வருகின்றன என்பது கவனிக்கப்படுகிறது புகார்கள முதலில் அனுப்புங்கள் ஆதாரங்கள் தற்போது அனுப்பவேண்டியதில்லை. அனுப்பப்படும் தகவல்கள் பாதுகாக்கப்படும்.

தமிழகத்தை சேர்ந்தவராய் இருந்தால், நம்மால் முடிந்தது, பாதிக்கபட்ட பல ஈழத்தமிழர் குடும்பங்கள் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தஞ்சம் புகுந்து இருக்கின்றனர்.... அவர்களை அணுகி இத்தைகைய புகர்களை அனுப்பும்படிபடி வேண்டிக் அவர்கள் அந்த புகார்களை அனுப்புவதற்கு தேவையான உதவி செய்யலாம்

புகார்கள் அனுப்ப இறுதி நாள் 15-12-2010
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி panelofexpertsregistry@un.org
விரும்பினால் அதே நேரத்தில் பீ.பீ.சீ. இல் unsubmission@cwvhr.org க்கு அனுப்பினால் ஓரு பிரதி இவர்களிடம் சேமிக்கப்படும்.
உலகத் தமிழ் பேரமைப்பு, சார்பாக தென் செய்தி என்ற செய்திமடலில் வந்தவையே மேற்குறிப்பிடபட்டவையாகும்

No comments: